கூலாயில் பற்றி எரிந்த லாரி! - ஒருவர் பலி

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, ஏப் 1 :  கூலாய் அருகே, வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் கி.மீ 40.6 வடக்கு நோக்கிச் செல்லும் பகுதியில்,  ஒரு லாரி மற்றும் டேங்கர் லாரி  மோதியதில், தீ பற்றி லாரி ஓட்டுநர்   உயிரிழந்தார்.
,
ஹினோ லாரியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை சுகாதார அமைச்சகப் பணியாளர்கள் உறுதி செய்ததாக  கூலாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஃபௌசி அவாங்கூறினார்.

நேற்று மதியம் 12.14 மணிக்குத் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து கூலாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து மூன்று வாகனங்கள் மற்றும் 16 பணியாளர்களை அனுப்பியதாகவும் அவர் கூறினார். 

ஓட்டுநர் இருக்கையில் சிக்கியிருந்த பாதிக்கப்பட்டவரின் உடலை குழுவினர் மீட்டு, காவல்துறையிடம் ஒப்படைத்தனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மேலும், மற்றொரு ஓட்டுநரை பொதுமக்கள் மீட்டதாகவும் அவர் கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த பிறகு, பிற்பகல் 2.28 மணிக்கு மீட்புப் பணி முடிவடைந்ததாக அவர் மேலும் கூறினார்.

இந்தச் சம்பவத்தால் எட்டு கிலோமீட்டர் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பிளஸ்  நிறுவனம் தெரிவித்தது.

மீட்புப் பணிகள், தீயணைப்பு முயற்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட வாகனங்களை அகற்றுவதற்கு வசதியாக, வடக்கு நோக்கிய அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டதாகவும் அது கூறியது.

எரிந்து கொண்டிருக்கும் வாகனத்திலிருந்து ஒருவரை ஒரு குழுவினர் அப்புறப்படுத்தும் காணொளி வைரலாகப் பரவியது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *