MIPP கட்சிக்கு மலாக்கா தேர்தலில் சீட் இல்லை!

top-news

கோலாலம்பூர். அக் 29: பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணித் தலைமையுடன் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து, மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP, வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடாது என அறிவித்துள்ளது.


தேர்தலில் தொகுதிகளைப் பெறுவதற்காகத் தங்களின் கொள்கைகளையும் போராட்டத்தின் கண்ணியத்தையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என கட்சியின் தலைவர் பி. புனிதன் தெரிவித்துள்ளார்.


இந்தியச் சமூகத்தின் நலன்களை கண்ணியத்துடனும் கொள்கை உறுதியுடனும் பாதுகாப்பதே தங்களின் முக்கிய நோக்கம் என்றும், அரசியல் களத்தில் அச்சமூகத்தின் குரலுக்கும் நலன்களுக்கும் உரிய அங்கீகாரமும் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


தொகுதிகளைக் கோரலாம்; ஆனால் தங்களின் போராட்டத்தின் கண்ணியத்தை ஒருபோதும் தியாகம் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


மேலும், அரசியல் கூட்டணியில் குழு ஒத்துழைப்பு, பரஸ்பர மரியாதை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை அவசியம் என்றார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்