கோத்தா திங்கி சாலை விபத்து! - மாணவி பலி

- Shan Siva
- 28 Feb, 2025
கோத்தா திங்கி, பிப் 28: நேற்று கோத்தா திங்கி ஜாலான் லோக் ஹெங்-மாவாய்
பகுதியில் உள்ள KM32 இல், மாணவி ஒருவர் தனது கார் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில்
உயிரிழந்தார்.
Nur Adnin Sabtu என அடையாளம்
காணப்பட்ட 19 வயது
பாதிக்கப்பட்டவர் தலையில் பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து
மாலை 6.50 மணியளவில் போலீசாருக்கு
தகவல் தெரிவிக்கப்பட்டதாக கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் யூசோப் ஓஸ்மான்
கூறினார்.
உடல் பிரேத
பரிசோதனைக்காக கோத்தா திங்கி மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டதாக
அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *