5 வயது மகனைக் கொன்ற தாய் மற்றும் காதலன் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 3: கடந்த மாதம் தனது ஐந்து வயது மகனைக் கொலை செய்ததாக, ஒரு வெளிநாட்டுப் பெண்ணும் அவரது வெளிநாட்டு காதலரும் இன்று பினாங்கு, ஜார்ஜ் டவுனில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

நீதிபதி நூர் இடாயு சலீம் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, ​​30 வயதான தீனா ஹயாதியும், 34 வயதான சானி என்று மட்டும் அடையாளம் காணப்பட்ட அந்த நபரும் தலையசைத்தனர். இருப்பினும், கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

ஆஸ்ட்ரோ அவானி தகவலின்படி, ஜூலை 23 அன்று காலை 9.30 மணிக்கு, சுங்கை துவா, லிண்டாங் மெராக்கில் உள்ள ஒரு வீட்டின் வரவேற்பறையில் இருவரும் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுக்கு, தண்டனை உறுதி செய்யப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் விதிக்கப்படும்.

வேதியியல் துறை மற்றும் நோயியல் அறிக்கைகளைச் சமர்ப்பிக்க அக்டோபர் 6-ஆம் தேதியை நீதிபதி நிர்ணயித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *