படுக்கையறையில் பிணமாக தாய் மற்றும் இரு மகள்கள்! ஈப்போவில் அதிர்ச்சி
- Shan Siva
- 31 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 31: பேராக் மாநிலம், ஈப்போவில் உள்ள பண்டார் பாரு தம்பூன் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில், 46 வயதுப் பெண்ணும், அவரது 11 மற்றும் 12 வயதுடைய இரண்டு மகள்களும் நேற்று இரவு படுக்கையறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
மேலும், அந்தப் படுக்கையறையில் கரிச் சாம்பல் என நம்பப்படும் ஒரு கொள்கலனையும் காவல்துறையினர் கண்டெடுத்ததாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து இரவு 9.10 மணிக்கு புகார் பதிவு செய்யப்பட்டதாக ஈப்போ காவல்துறைத் தலைவர் நஜிப் ஹம்சா தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் குற்றச் செயல்களுக்கான எந்தக் கூறுகளோ அல்லது காயங்களோ இல்லை என முதற்கட்ட சோதனையில் கண்டறியப்பட்டது.
தற்போதைக்கு இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்று பிரேதப் பரிசோதனை நடத்தப்படும என்று கூறிய அவர், இந்த வழக்கு குறித்து யூகங்கள் செய்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை எச்சரித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



