கணவர் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது - விவாகரத்து பற்றி லதா ரஜினிகாந்த்!

top-news
FREE WEBSITE AD

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராக தனது இடத்தை நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறார். அவர் இயக்கிய லால் சலாம் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. தற்போது ஜெய் மற்றும் சுராஜ் வெஞ்சமுடு நடிக்கும் 'டெக்ஸ்லா' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் பூஜை விழா நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய சில கருத்துகள் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன.

அவர் பேசுகையில்,"ஒரு குடும்பத்தில் கணவரின் ஆதரவு இல்லாமல் ஒரு பெண் எந்த விஷயத்தையும் சாதிக்க முடியாது. குடும்பத்தினர், அண்ணன், தங்கை, குழந்தைகள் என அனைவரும் ஊக்கம் கொடுத்தால் தான் ஒரு பெண் முன்னேற முடியும். முதலில் என் கணவருக்கு தலைவணங்கி நன்றி சொல்ல வேண்டும். ஒவ்வொருவரையும் நலமாக நினைக்கும் மனசு அவருக்கு இருக்கிறது. எனது முயற்சிகள் அனைத்தையும் அவருக்கே சமர்ப்பிக்கிறேன்" என்று கூறினார்.

மேலும் விவாகரத்து குறித்து அவர் கூறிய கருத்தும் கவனத்தை ஈர்த்தது."விவாகரத்து நடப்பதும், நடக்காததும் சூழ்நிலை மற்றும் ஒவ்வொருவரின் மனப்பான்மையைப் பொறுத்தது. அந்த காலத்தில் பல அழுத்தங்களை சமாளிக்கும் மனப்பான்மை இருந்தது. இன்றும் பலர் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள். இரண்டு மனங்களுக்குள் இருக்கும் உண்மையான அன்பு தான் முக்கியம்" என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *