தினமும் விளக்கு திரியை மாற்றுபவர்களாக நீங்கள்!

top-news
FREE WEBSITE AD

ஜாதகத்தில் நமக்கு நல்ல நேரம் இருந்தாலும் நம் வீட்டில் நல்லது நடக்கவில்லை என்றால், நீங்கள் செய்யும் இந்த ஒரு சில விஷயங்களும் காரணமாக இருக்கும் என்பதை மறக்காதீர்கள்.நம் முன்னோர்கள் ஒவ்வொன்றும் சொல்லி வைத்தது சாதாரண விஷயம் அல்ல. ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னாலும் ஆழமான கருத்துகளும், நல்லவைகளும் நிச்சயம் இருக்கும்.

தினமும் திரியை மாற்றுபவர்களாக இருந்தாலும், அல்லது வாரம் ஒரு முறை மாற்றினாலும் திரிகளை சேர்த்து வைக்க வேண்டும். தேவையில்லாத ஏதாவது ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் சேர்த்து வைத்து வாருங்கள். கொஞ்சம் திரிகள் சேர்ந்ததும்  இரவு சாப்பிட்டு முடித்த பின்னர் தூங்க செல்லும் முன் வீட்டில் இருக்கும் அனைவரையும் கிழக்கு முகமாக பார்த்து உட்கார வையுங்கள்.

அந்த திரிகளை தூப காலில் போட்டு கொள்ளுங்கள். பின்னர் அப்படியே அனைவரையும் சேர்த்து வலமிருந்து இடமாக மும்முறை மற்றும் இடமிருந்து வலமாக மும்முறை திருஷ்டி கழித்து விடுங்கள். திருஷ்டி கழித்து முடிந்ததும் வீட்டு வாசலில் வைத்து அதனை கொளுத்தி விடுங்கள்.முழுக்க எரிந்து முடிந்ததும், வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் இந்த நெருப்பில் பஸ்பமாகிவிடும். உங்களை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் எல்லாம் இந்த தீயில் வெந்துவிடும்.

திரிகள் கருகி கரியாகி முடிந்ததும் அதனை கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள். அல்லது தண்ணீர் ஊற்றி சமையலறை சிங்கிள் போட்டு விடுங்கள். இதனால் உங்களுக்கு இருக்கும் அத்தனை கஷ்டங்களும் தீரும்.

வீட்டில் நேர்மறை ஆற்றல் ஊடுருவும். நல்ல எண்ணங்களும், சிந்தனைகளும் மலரும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *