பச்சிளம் பெண் குழந்தையைக் கைவிட்ட ஜோடி கைது! - நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, ஏப் 15: ஸ்கூடாய், தாமான் யுனிவர்சிட்டியில் உள்ள மசூதி வாகன நிறுத்துமிடத்தில் பச்சிளம் பெண் குழந்தையைக் கைவிட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பதின்மவயது தம்பதியினர், வழக்கு விசாரணைகளுக்கு உதவுவதற்காக மூன்று நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

18 வயது இளைஞரும் 19 வயது இளம் பெண்ணும் இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறை இந்த நீதிமன்றக் காவல் உத்தரவைப் பெற்றது.

அந்தத் தம்பதியினருக்கு எதிரான நீதிமன்றக் காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் ஆதிஃபா ஹமிசா பிறப்பித்தார்.

ஏப்ரல் 11 அன்று ஸ்கூடாய்,  தாமான் யுனிவர்சிட்டியில் உள்ள மசூதி வாகன நிறுத்துமிடத்தில் பச்சிளம் குழந்தையைக் கைவிட்டதாகக் கூறப்படும் வழக்கில், காவல்துறை அந்தத் தம்பதியினரைக் கைது செய்ததாக இன்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் இன்று அதிகாலை 2.51 மணிக்கு தமன் யுனிவர்சிட்டியில் கைது செய்யப்பட்டனர்.

குழந்தையைக் கைவிடுதல் தொடர்பான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 317-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக  ஜொகூர், வடக்கு பகுதி காவல்துறை தலைவர் ராடின் ராம்லான் ராடின் தாஹா தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *