கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில் கோர விபத்து! நான்கு பேர் பலி

top-news

கோலாலம்பூர், ஜுன் 14: இன்று மதியம் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் டிரெய்லர் லாரி மோதியதில், ஒரு வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியாகினர்.

அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும்,  அதே நேரத்தில் 40 வயதான லாரி ஓட்டுநர் தலை மற்றும் இடுப்பு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவுக்கப்பட்டுள்ளது.

சடலங்களை வெளியே எடுக்க தீயணைப்பு வீரர்களுக்கு இரண்டு மணி நேரம் பிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மெதுவாகச் சென்றுகொண்டிருந்த வாகனத்தை மோதுவதற்கு முன்பு, டிரெய்லர் சறுக்கியிருக்கலாம் என்று நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோலாலம்பூரிலிருந்து குவாந்தான் நோக்கி லாரி சென்று கொண்டிருந்ததாக பகாங் காவல்துறை தெரிவித்துள்ளது. ஒரு குன்றிலிருந்து கீழே இறங்கி, ஒரு வளைவில் திரும்பும்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படுகிறது.

இடதுபுறப் பாதையில் சென்றுகொண்டிருந்த காரின் மீது மோதுவதற்கு முன்பு, அந்த லாரி சாலையின் இடதுபுறமாகக் கவிழ்ந்தது என்று மாநில காவல்துறைத் தலைவர் யஹாயா ஒஸ்மான் கூறினார்.

லாரி ஓட்டுநர் மீது 15 நிலுவையில் உள்ள போக்குவரத்து சம்மன்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்