மரம் விழுந்து நான்கு பேர் மரணம்! பெந்தோங்கில் பயங்கரம்
- Shan Siva
- 03 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 3: பகாங், பெந்தோங்கில் இன்று மதியம் மரம் விழுந்து வாகனம் ஒன்றின் மீது மோதியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் ஒரு குழந்தை காயமடைந்தது.
ஜாலான் காராக் லாமாவில், ஜண்டா பைக் நுழைவாயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பிக்கப் டிரக் சம்பந்தப்பட்ட இந்தச் சம்பவம் குறித்து மதியம் 12.30 மணிக்கு காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக பெந்தோங் காவல் துறைத் தலைவர் ஜைஹாம் கஹார் கூறினார்.
உயிரிழந்தவர்கள் 35 வயது ஓட்டுநர், முன் இருக்கையில் அமர்ந்திருந்த 36 வயதுப் பெண் மற்றும் அவரது ஐந்து வயது மகன் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 40 வயது ஆண் ஆகியோர் என்று அவர் கூறினார்.
பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஐந்து வயது சிறுவன் காயமடைந்து சிகிச்சைக்காக பெந்தோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான். அந்த இரு சிறுவர்களும் இரட்டையர்கள் என்று நம்பப்படுகிறது.
சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக தெமர்லோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜைஹாம் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



