PPP இளைஞர் பிரிவின் பாரதியார் விழா! 'மகாகவி பாரதியார் அன்று இன்று நாளை'!
- Shan Siva
- 21 Nov, 2026
கோலாலம்பூர், நவ 21 : மகாகவி பாரதியாரின் சிந்தனைகளை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், மக்கள் முற்போக்கு கட்சியான PPP-யின் இளைஞர் பிரிவு ஏற்பாட்டில், 'மகாகவி பாரதியார்: அன்று, இன்று, நாளை' என்ற தலைப்பில் பாரதியார் விழா வெகுசிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 19ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர் ஜாலான் அம்பாங்கில் உள்ள விஸ்மா MCA மண்டபத்தில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பாரதியாரின் கொள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி மற்றும் மலாயா பல்கலைக்கழகத்தின் திருவள்ளுவர் இருக்கை முன்னாள் தலைவர் பேராசிரியர் முனைவர் அ. செல்லம் பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியுடன் இணைந்து தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் மாணவர்களுக்கான தமிழ்க் கட்டுரைப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'மகாகவி பாரதியார்: அன்று, இன்று, நாளை' என்ற கருப்பொருளில் நடைபெறும் இப்போட்டியில்,போட்டியாளர்கள் பாரதியாரின் வரலாறு, சிந்தனைகள் மற்றும் படைப்புகள் தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளைத் தமிழில் கைப் பிரதியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு கல்விப் பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. தொடக்கப்பள்ளிப் பிரிவில் RM300, RM200, RM100 என்றும், இடைநிலைப்பள்ளிப் பிரிவில் RM500, RM300, RM200 என்றும், உயர்கல்விப் பிரிவில் RM800, RM500, RM300 என்றும் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெற்றியாளர்கள் அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ் மற்றும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.
நவம்பர் 30 ஆம் தேதிக்குள் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் Great Ticket இணையதளம் மூலம் நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என ஏற்பாட்டுக் குழு தலைவரும், பிபிபி கட்சியின் தேசிய இளைஞர் அணித் தலைவருமான சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.
நுழைவுக்கான கட்டணம் மாணவர்களுக்கு RM10, பெரியவர்களுக்கு RM20, VIP பிரிவுக்கு RM50, VVIP பிரிவுக்கு RM250, MIP பிரிவுக்கு RM500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
மேல் விவரங்களுக்கு : 019-221 2131 என்ற எண்களில் அழைக்கலாம்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

