காதல் மோசடியில் சிக்கி RM151,967 இழந்த அரசு ஊழியர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர். செப் 7: துருக்கியில் பணிபுரியும் திட்ட மேலாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவரின் 'காதல் மோசடி'யில்  சிக்கி, அரசு ஊழியர் ஒருவர் RM151,967-ஐ இழந்துள்ளார்.

 வெளிநாடுகளில் உள்ள தனது திட்டங்களைத் தொடரவும், தனிப்பட்ட செலவுகளைச் சமாளிக்கவும் பணம் தேவை என்று அந்த நபர் கூறியதை நம்பி, பாதிக்கப்பட்ட பெண் வங்கிக் கடன் கூட பெற்றுள்ளார்.

 பாதிக்கப்பட்ட பெண் ஏப்ரல் மாதத்தில் அந்த 'வெளிநாட்டவருடன்' நட்பு கொண்டதாகவும், பின்னர் அவருக்கு பல்வேறு கட்டங்களாகப் பணத்தை அனுப்புமாறும் அவரிடம் கூறப்பட்டதாகவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முகமது ஷஹ்ரில் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

 தனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது, திட்டங்களை நிர்வகிக்கவும் சொந்தத் தேவைக்காகவும் பணம் தேவைப்படுவதாகவும் அந்த நபர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கூறியிருக்கிறார்.

 பாதிக்கப்பட்ட பெண் தனது சேமிப்பைப் பயன்படுத்தி, வங்கிக் கடன் பெற்று அந்த நபருக்கு உதவினார்.

 இந்த ஆண்டு ஏப்ரல் 22 முதல் ஆகஸ்ட் 26 வரை, அடையாளம் தெரியாத 10 வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் RM151,967 மதிப்பிலான 35 பணப் பரிமாற்றங்களை அவர் மேற்கொண்டுள்ளார் என்று ஷஹ்ரில் இன்று வெளியிட்டார்.

 சமூக ஊடகங்களில் அந்த நபர் தன்னைத் தொடர்புகொள்ள முடியாதவாறு தடுத்த பிறகு , தான் காதல் மோசடியில் சிக்கியதை உணர்ந்ததாக,  பாதிக்கப்பட்ட பெண், நேற்று மாலை 6 மணிக்கு மாவட்டக் காவல் தலைமையகத்தில் புகார் அளித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *