அரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2023 முதல் இதுவரையில் தலா வெ.22 லட்சம் பெற்றுள்ளனர்!
- Muthu Kumar
- 14 Feb, 2025
கோலாலம்பூர், பிப். 14-
அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் தலா 22 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டைப் பெற்றிருப்பதாக, கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலேஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பிரதமரின் சிறப்பு நிதி ஒதுக்கீடான இந்த நிதியானது. மலேசியாவின் ஐந்தாண்டுத் திட்டத்திற்கான துணை மேம்பாட்டு நிதியாகும். இந்த நிதி அரசாங்கத்தின் நிதி ஆற்றலுக்கு உட்பட்டு வழங்கப்படுதாகவும் அவர் கூறியுள்ளார்."கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில், தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த ஒவ்வோர் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினரும் 22 லட்சம் வெள்ளியைப் பெற்றிருக்கின்றனர். சபா மற்றும் சரவாக்கைச் சேர்ந்த அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தலா 17 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டிருந்தது என்று. மக்களவையில் டாக்டர் ஜலேஹா தெரிவித்தார்.இந்த நிதி, நடப்பில் உள்ள கொள்கைகள் மற்றும் நிதி ஆற்றலுக்கு இணங்கவும் வழங்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், "நாடாளுமன்றத் தொகுதிகளின் மேம்பாட்டுக்காக கிடைக்கும் ஒரே நிதியாக இது இருப்பதில்லை.
“வட்டார மேம்பாட்டு வாரியம் போன்ற இதர அமைச்சுகள் மற்றும் அரசாங்க நிறுவனங்களும் நிதி ஆதரவை வழங்கி வருகின்றன. இந்த நிதிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால், நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பிரதமரின் சிறப்பு, நிதி ஒதுக்கீட்டையும் இது மிஞ்சிவிடும் என்று டாக்டர் ஜலேஹா தெரிவித்தார்.எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலகம் மற்றும் நிர்வாகச் செலவுக்கான நிதி குறித்த ஒரு கேள்விக்கு, ஜலேஹா பதிலேதும் அளிக்கவில்லை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



