ஜனநாயகத்தையும் பேச்சுரிமையையும் அரசாங்கம் மதிக்கிறது -பிரதமர் அன்வார்!

top-news
FREE WEBSITE AD

மக்களவையின் அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். அமைதிப் பேரணிகளை இடைஞ்சல் இல்லாமல் சீராக நடத்துவதற்கு இந்த உத்தேச சட்டத்திருத்தங்கள் வழிகோலும். குறிப்பாக, பொதுப் பேரணிகள் நடத்துவதற்கு வளாக உரிமையாளர்களிடம் இருந்து ஒப்புதல்பெற வேண்டும் எனும் இப்போதைய நிபந்தனை அகற்றப்படவிருக்கிறது என்று தமது முகநூல் பதிவில் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

பேரணி நடத்துவதற்கு வெறும் ஐந்து நாட்கள் இருக்கும்போது கூட அது பற்றி ஏற்பாட்டாளர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்தால் போதுமானது பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்படும் கூட்டங்களைத் தவிர்த்து இதர எல்லா வகையான பேரணிகளையும் இடையூறு இன்றி நடத்துவதற்கு அச்சட்டத்திருத்தங்கள் அனுமதிக்கின்றன என்றார் அவர்.

இடைக்கால நடவடிக்கையாக, நடப்பில் இருந்துவரும் சில விதிமுறைகளை அமல்படுத்த தடை விதிக்கப்படுகிறது. சட்டத்திருத்தங்கள் செயல்பாட்டுக்கு வரும்வரை வளாக உரிமையாளர்களிடம் முன்அனுமதி பெறாமல் அங்கு பேரணிகள் நடத்தலாம் என்றார் அன்வார்.அமைதிப் பேரணிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவிருப்பதாக நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் அன்வார் அறிவித்திருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *