இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்கள்!

top-news
FREE WEBSITE AD

இந்த வாரம் மார்ச் 3 – மார்ச் 9 தேதி முதல்  ஓடிடி தளங்களில் வெளியாகப்போகும் சுவாரஸ்யமான திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்.

With Love : அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியான இந்த ரொமாண்டிக் காமெடி படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. பள்ளிப் பருவத்தில் காதலித்த இருவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும்போது நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளே இப்படத்தின் கதை. திரையரங்குகளில் வெளியாகி ரூ. 35 கோடி வரை வசூல் செய்து சூப்பர் ஹிட்டான இப்படம் நெட்பிளிக்ஸ் OTT  தளத்தில் வருகிற 6ம் தேதி வெளியாகிறது.

Dheeram : இது ஒரு விறுவிறுப்பான ஆக்சன் த்ரில்லர் திரைப்படம். கேரளம்  கோழிக்கோடில் நடக்கும் தொடர் கொலைகளைத் துப்பறியும் ஒரு துப்பறியும் அதிகாரியைச் சுற்றியே கதை நகர்கிறது. திவ்யா பிள்ளை, அஜு வர்கீஸ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளனர். சன் நெக்ஸ்ட் தளத்த்தில் வருகிற 6ம் தேதி ஸ்ட்ரீமிங் ஆகிறது.

Gandhi Talks : விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஒரு மௌனத் திரைப்படம் (Silent Film). கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கிய இந்தப் படத்தில் அரவிந்த் சாமி மற்றும் அதிதி ராவ் ஹைதாரியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் வருகிற 6ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகிறது.

Subedaar: அனில் கபூர் நடித்துள்ள இந்த ஆக்சன் டிராமா படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலுக்கு எதிராகப் போராடும் ஒரு ஓய்வுபெற்ற சுபேதாரின் வீரமிக்க பயணமே இப்படத்தின் கதை. அமேசான் பிரைமில் நாளை மறு நாள் அதாவது 5ம் தேதி வெளியாகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *