சபாவில் முதலை தாக்கி சிறுவன் பலி!
- Shan Siva
- 12 Nov, 2026
கோலாலம்பூர், நவ 12: சபா மாநிலம் கூடாட் மாவட்டம் பூலாவ் பாங்கி பகுதியில் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் முதலைத் தாக்குதலில் உயிரிழந்தான்.
முகமது ஹில்மி நூர்ஜாஹிட் என்ற அந்தச் சிறுவன், தனது மூத்த சகோதரருடன் சுங்கை செமாயான் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தான்.
அப்போது தூண்டில் ஆற்றில் சிக்கியதால் அதை விடுவிக்க சிறுவன் தண்ணீருக்குள் இறங்கியதாகவும், அப்போது முதலை அவனைத் தாக்கி இழுத்துச் சென்றிருக்கலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தகவல் அறிந்து காவல்துறையினர், குடிமைத் தற்காப்புப் படையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இரவு சுமார் 8.10 மணியளவில் ஆற்றுப் பாலத்தின் கீழ் சிறுவனின் உடலை அவனது தந்தை கண்டெடுத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

