பொம்மை ஊசிகளுக்கு பினாங்கில் தடை!
- Shan Siva
- 13 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 13: பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக பொம்மை ஊசிகள் விற்பனைக்கு பினாங்கு தடை விதித்துள்ளது என நிர்வாக கவுன்சிலர் ஹங் மூய் லாய் தெரிவித்துள்ளார்.
இரவுச்
சந்தைகளிலும், வணிக வளாகங்களிலும், மற்றும்
இணையதளங்கள் வழியாகவும் இதுபோன்ற பொம்மை ஊசிகள் வெளிப்படையாக விற்கப்படுவதைத் தனது
குழுவினர் கண்டறிந்ததாக உள்ளாட்சி மற்றும் நகர, கிராம
திட்டமிடல் குழுவின் தலைவர் கூறினார்.
ஊசிகளைப்
பொம்மைகளாகப் பயன்படுத்துவது கவலையளிக்கிறது, ஏனெனில் அவை
கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்ட மருத்துவ சாதனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று கோம்தாரில் உள்ள அவரது
அலுவலகத்தில் இன்று அவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
ஊசிகள்
கூர்மையாக இல்லாவிட்டாலும், அவை
குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்
கூறினார்.
மருத்துவ
ஊசிகள் கடுமையான கழிவு மேலாண்மை நடைமுறைகளுக்கு உட்பட்டவை என்பதைக் குறிப்பிட்டு, இதுபோன்ற
பொம்மைகளை முறையற்ற முறையில் அப்புறப்படுத்துவது குறித்த கவலைகளையும் ஹங்
எடுத்துரைத்தார்.
தடையை
மீறும் வியாபாரிகள் மீது பினாங்கு மாநகர
சபை மற்றும் செபெராங் பிராய் மாநகர சபை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று ஹங்
கூறினார்.
இந்தப் பொம்மைகளை எந்த வியாபாரிகளும் விற்கவில்லை என்பதை உறுதி செய்வதற்காக, உள்ளூர் அதிகாரிகள் வணிக வளாகங்களிலும் இரவுச் சந்தைகளிலும் தினசரி திடீர் சோதனைகளை நடத்துவார்கள். மேலும், இணையவழியில் அவற்றின் விற்பனையைக் கட்டுப்படுத்த, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சிடம் புகார் செய்யப்படும் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



