வட்ட வடிவில் கிணறு தோண்டுவது ஏன் தெரியுமா?

top-news
FREE WEBSITE AD

கிணறுகள் சதுரம், செவ்வகம், வட்ட வடிவில் அமைக்கப்பட்டு இருப்பதை நாம் பார்த்து இருப்போம். இதில் சதுரம், செவ்வக வடிவத்தை விட வட்ட வடிவில் கிணறு அமைப்பது தான் பாதுகாப்பானது. ஏன் தெரியுமா? வட்டவடிவில் கிணறு அமைப்பதால் கிடைக்கும் பலன்? மற்றும் அதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்கள் பற்றி சிந்தனைப் பூங்காவில் பார்க்கலாம்.

குளம், குட்டை, ஊரணி, போர்வெல் உள்ளிட்டவற்றை போல் நீர் ஆதாரத்துக்கு முக்கியமாக இருப்பது கிணறு. குடிநீர் மட்டுமின்றி விவசாயத்துக்கு கிணற்றை ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கிணறு மிகவும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

நம் ஊர்களில் கிணற்றை எடுத்து கொண்டால் சதுரம், செவ்வகம் மற்றும் வட்ட வடிவில் தோண்டப்பட்டு இருக்கும். இதில் சதுரம், செவ்வக வடிவ கிணற்றை விட வட்டவடிவில் கிணறு தோண்டுவது தான் பாதுகாப்பானது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?..

எந்த வடிவில் தோன்றினாலும் பூமிக்கடியில் ஊற்று இருந்தால் தானே தண்ணீர் இருக்கும். இதனால் கிணறு எப்படி இருந்தால் என்ன? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் ஒன்றை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். கிணறு என்பது நீண்டகாலமாக தண்ணீர் தரும் நீர் ஆதாரம். இதனால் அந்த கிணறு மண் சரிவு இன்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் அல்லவா?. அப்படியென்றால் வட்டவடிவ கிணறு தான் சிறந்தது என்கிறது அறிவியல்.

பொதுவாகவே தரைக்கு உள்ளே ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அழுத்தம் கூடும். இதனால் தரைக்கு உள்ளே இருக்கும் பாறைகள் கனமாக இருக்கும். இதனால் அழுத்தம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். இது கிணற்றின் சுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

வட்ட வடிவில் கிணறு தோண்டும்போது தண்ணீர் அனைத்து இடங்களிலும் சமமாக இருக்கும். கிணற்றுக்குள்ளே அழுத்தமும் சமமாக பகிர்ந்து அளிக்கப்படும். கிணற்றுக்குள் ஒரு இடத்தில் கூடுதல் அழுத்தம். மற்றொரு இடத்தில் குறைந்த அழுத்தம் என்ற பிரச்சனை இருக்காது. அழுத்தம் சமநிலைப்படுத்தப்பட்டு பகிர்ந்தளிக்கப்படும். இதனால் அழுத்தம் காரணமாக சுற்றுச்சுவர்களுக்கு பாதிப்பு வராது. இதனால் கிணற்றின் ஆயுட்காலம் அதிகரிக்கும்.

உதாரணமாக நம் ஊர்களில் உள்ள பல கிணறுகளில் சுற்றுசுவர் சரிந்து விழுந்து இருப்பதை நாம் பார்த்து இருப்போம். அந்த கிணறுகளின் வடிவத்தை கவனித்து பாருங்கள். பெரும்பாலான கிணறுகள் சதுரம் அல்லது செவ்வக வடிவில் தோண்டப்பட்டவையாக இருக்கும். வட்ட வடிவில் தோண்டப்பட்ட கிணறுகளில் பாதிப்பு என்பது அவ்வளவு எளிதில் வராது. இந்த அறிவியல் காரணத்தை அறிந்து தான் நம் முன்னோர்கள் வீடுகளில் தண்ணீருக்கு பயன்படுத்தும் கிணறுகளை வட்ட வடிவமாக தோண்டி உள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *