பகாங்கில் ஆட்சி மாற்றமா? பகாங் மெந்திரி பெசார் விளக்கம்!
- Thinagaren Sanggaren
- 31 Dec, 2025
டிசம்பர் 31,
பெர்லிஸில் ஆட்சிக் கலைக்கப்பட்டதை அடுத்து அம்னோ டி.ஏ.பியின் கூட்டணியில் அமைந்திருக்கும் பகாங் மாநிலத்திலும் ஆட்சி கலைக்கப்படும் என வெளியான செய்தி ஒரு வதந்தி என பகாங் மாநில மெந்திரி பெசார் Dato' Sri Wan Rosdy Wan Ismail தெரிவித்தார். பகாங்கில் பாரிசானும் டி.ஏ.பியும் நல்ல புரிந்துணர்வுடன் பகாங் மாநில மக்களின் நலனை முன்னிருத்தி செயல்படுவதாக Dato' Sri Wan Rosdy உறுதிப்படுத்தினார்.
கடந்த 2023 பகாங் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் 42 சட்டமன்றங்களில் பாரிசான் கூட்டணி 17 சட்டமன்றங்களிலும் பெரிக்காத்தான் கூட்டணி 17 சட்டமன்றங்களிலும் பக்காத்தான் கூட்டணி 8 சட்டமன்றங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர். ஆட்சி அமைக்க தேவையான 22 சட்டமன்றப் பெரும்பான்மையை எந்தவொரு கூட்டணிக் கட்சியும் கொண்டிருக்காததால் பாரிசானும் பக்காத்தானும் இணைந்து 25 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாரிசான் தலைமையில் Dato' Sri Wan Rosdy Wan Ismail ஆட்சி அமைத்தார். எதிர்க்கட்சித் தலைவராகப் பாஸ் கட்சியின் துணைத் தலைவரும் CHEKA சட்டமன்ற உறுப்பினருமான TUAN IBRAHIM TUAN MAT பதவி ஏற்றார்.
நஜீப்பின் நீதிமன்ற வழக்கில் டி.ஏ.பியினர் நஜீப்பிற்கு எதிரானக் கருத்துகளை வெளியிட்டதை அடுத்து அம்னோவின் உயர்மட்ட தலைவர்களும் டி.ஏ.பியின் உயர்மட்டத் தலைவர்களுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது. அம்னோ டி.ஏ.பிக்கு இடையிலான இந்த கருத்து மோதல் ஆட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



