எதிரி யார் நண்பர் யார் என பக்காத்தானுக்குத் தெரியவில்லை! அமானா கட்சி வலியுறுத்து!
- THINAGAREN SANGGAREN
- 16 Nov, 2026
நவம்பர் 16,
பக்காத்தான் தனது அரசியல் எதிரிகள் அரசியல் கூட்டாளிகள் யார் என்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டும் என பக்காத்தான் கூட்டணிக் கட்சியான அமானா வலியுறுத்தியுள்ளது. பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருப்பதால் அரசியல் நகர்வுகளைப் பக்காத்தான் மேற்கொள்ள வேண்டும் என அமானா கட்சியின் பொதுச் செயலாளர் Muhammad Faiz Fadzil கேட்டுக்கொண்டார். பக்காத்தான் தலைமை துணிச்சலுடன் ஒரு முடிவை எடுத்தால் மட்டுமே அடிமட்டத்தில் நாம் வலுவாக இயங்க முடியும் என Muhammad Faiz Fadzil தெரிவித்தார்.
கடந்த ஜொகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா தேர்தல்களில் பக்காத்தான் ஒரு நிலையான முடிவு எடுக்காமல் யாரை எதிர்க்கிறோம் என்கிற வெளிப்படையான வரையறை இல்லாமல் போட்டியிட்டதால் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் என Muhammad Faiz Fadzil சுட்டிக்காட்டினார். நமக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது. ஆனால் மக்களுக்குத் தெளிவாக நாம் யாரை எதிர்கிறோம் என்பதை நாம் தான் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என Muhammad Faiz Fadzil தெரிவித்தார். பொதுத் தேர்தலுக்கு முன்னமே பக்காத்தான் இழந்த வாக்குகளை மீண்டும் பெறுவதற்கு அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணியை உருவாக்கா வேண்டும் என Muhammad Faiz Fadzil கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

