பங்கோர் படகு விபத்து! பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு
- Shan Siva
- 16 May, 2026
ஈப்போ, மே 16 பங்கோர் தீவுக்கு அருகே இந்தோனேசிய புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
நேற்று மேலும் நான்கு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்த. இயானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
புலாவ் புலோவின் தென்மேற்கே மூன்று ஆண்களின் உடல்களும், புலாவ் சங்கா கெச்சிலின் தென்மேற்கே அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படாத நான்காவது உடலும் கண்டெடுக்கப்பட்டதாக மலேசிய கடல்சார் அமலாக்க முகமை (MMEA) தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தம் 23 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தேடுதல் மற்றும் மீட்புப் பணி, அதன் ஏழாவது நாளான இன்றும் தொடரும். "மேலும் உடல்கள் கண்டெடுக்கப்படாவிட்டால், மீட்புப் பணி கைவிடப்படலாம்," என்று பேராக் MMEA இயக்குநர் சுக்ரி கோடோப் கூறினார்.
இந்தோனேசிய புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் அந்தப் படகு, மே மாதம் புலாவ் பாங்கோரிலிருந்து சுமார் 8.2 கடல் மைல் தொலைவில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



