ரஷியாவில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்றத் தேர்தல்
- Surendran Sumdraraj
- 18 Sep, 2026
மாஸ்கோ: ரஷியாவில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. செப்டம்பர் 18 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்தலில், 450 உறுப்பினர்களைக் கொண்ட ஸ்டேட் டுமாவுக்கான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
2022-ஆம் ஆண்டு உக்ரைனில் ரஷியா முழு அளவிலான ராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய பின்னர் நடைபெறும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். போர் நீடித்து வரும் நிலையில், பொருளாதார அழுத்தம், எரிபொருள் விநியோக பிரச்சினைகள் மற்றும் உக்ரைனின் டிரோன் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
அதிபர் விளாடிமிர் புதினின் ஆதரவு பெற்ற யுனைடெட் ரஷியா கட்சி தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. இந்தத் தேர்தலிலும் அக்கட்சி தனது ஆதிக்கத்தைத் தொடரும் என பல அரசியல் பார்வையாளர்கள் எதிர்பார்ப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



