நாடாளுமன்றத்தைக் கலைக்கலாமா? அன்வாருடன் பாரிசான் பேச்சுவார்த்தை!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 26,

அடுத்த பொதுத் தேர்தல் 2027 ஆம் ஆண்டு நடைபெறுமா அல்லது அதற்கு முன்னமே நாடாளுமன்றம் கலைக்கபடுமா என்பது குறித்து ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாரிசான் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகப் பாரிசான் தலைவரும் துணைப்பிரதமருமான Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார். நாடாளுமன்றத்தைக் கலைப்பது என்பது பாரிசான் மட்டுமே எடுக்கும் முடிவு அல்ல. ஒற்றுமை கூட்டணியில் 18 கட்சிகளும் 5 கூட்டணிகளும் இடம்பெற்றுள்ளன. அனைவரும் ஒற்றை இலக்கு நிலையில் சிந்திக்க வேண்டும் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கலாமா என பேச்சுவார்த்தை நடந்ததா என கேள்விக் கேட்டால், ஆமாம் என நான் சொல்வேன். ஆனால், நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என பாரிசான் வலியுறுத்தியதா என கேட்டால், நான் இல்லை என்றே சொல்வேன். நாடாளுமன்றத்தைக் கலைக்கவும், ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் பாரிசான் எந்தவொரு முன்னெடுப்பும் எடுக்கவில்லை என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi உறுதியளித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *