நம்ப வைத்து கழுத்தை அறுத்த பாஸ்! பெர்சத்து குற்றச்சாட்டு!
- THINAGAREN SANGGAREN
- 10 Jun, 2026
ஜூன் 10,
பெரிக்காத்தான் கூட்டணியில் பெர்சத்து தலைவர் முகைதீன் யாசின் தலைவராக இருந்த வரையும் பாஸ் கட்சி நம்பகமான கட்சியாகவும் வெளிப்படையானக் கட்சியாகவும் இருந்தது. ஆனால் இப்போது கூட்டணியை நம்பி வந்தவர்களைக் கழுத்தை அறுத்து, துரோகம் செய்யும் கட்சியாகப் பாஸ் கட்சி மாறிவிட்டது என பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Datuk Tun Faisal Ismail Aziz குற்றம்சாட்டினார்.
பெர்சத்துவுடன் கூட்டணியில் இருக்கும் போதே பாஸ் கட்சி, துரோகம் செய்ய தொடங்கிவிட்டதாகவும் அது வெளிவரும் நேரத்தில் பெர்சத்துவை ஏமாற்றி பெரிக்காத்தான் கூட்டணியைக் கைப்பற்றியதாகவும் Datuk Tun Faisal Ismail Aziz தெரிவித்தார். பெரிக்காத்தானின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் பெர்சத்துவும், பெரிக்காத்தானின் கூட்டணிக் கட்சிகளான MIPP, GERAKAN கட்சிகள் தெளிவாக இருந்தது. ஆனால் பாஸ் கட்சி ஆரவாரம் செய்தது, எதிர்க்கட்சித் தலைவர் உட்பட முக்கிய பொறுப்புகளில் பெர்சத்துவுக்கு எதிராகப் பாஸ் செயல்பட்ட போதும் பெர்சத்து அமைதியாக இருந்தற்கு ஒரே காரணம் கூட்டணியில் நாம் ஒன்றாக இருப்பதால் என Datuk Tun Faisal Ismail Aziz தெரிவித்தார்.
ஆனால் இறுதியாக, பெரிக்காத்தானையும் கைப்பற்றி இப்போது பெர்சத்துவைப் பெரிக்காத்தானிலிருந்து விலக்குவதாகப் பாஸ் கட்சி எடுத்திருக்கும் முடிவு, வெளிப்படையான துரோகம் என Datuk Tun Faisal Ismail Aziz கடுமையாகச் சாடினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



