பாஸ் கட்சியை விடவும் பெர்சத்து சிறந்தது! – உரிமை ராமசாமி!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 2,

பெர்சத்துவை விடவும் அம்னோவுடன் அரசியல் கூட்டணி அமைப்பது பாஸ் கட்சிக்கு ஆபத்து என பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சரும் உரிமை கட்சியின் தலைவருமான பேராசிரியர் Ramasamy எச்சரிக்கை விடுத்துள்ளார். மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதில் பாஸ் கட்சியை விடவும் பெர்சத்து சிறந்த அரசியல் ஆதரவைப் பெற்ற கட்சியாகத் திகழ்கிறது என பேராசிரியர் Ramasamy புகழாரம் சூட்டினார். அம்னோவுடன் பாஸ் கட்சி இணைவது மணலில் கட்டப்படும் கோட்டை போல உறுதியற்ற அரசியல் நிலைத்தன்னையானது என பேராசிரியர் Ramasamy விமர்சித்துள்ளார்.

பாஸ் கட்சிக்கு இஸ்லாம் அல்லாதவர்களின் மத்தியில் தவறான, நம்பிக்கையற்ற பார்வை மிகுந்து இருந்தது. ஆனால் இப்போது மலாய்க்காரர் அல்லாத சமூகத்தினர் பாஸ் கட்சியை நம்ப தொடங்கியுள்ளனர், அதற்கு காரணம் பெர்சத்து என பேராசிரியர் Ramasamy பாஸ் கட்சிக்கு நினைவூட்டினார். பாஸ் கட்சி பெர்சத்துவை ஒதுக்கி வைத்தால், மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவைப் பாஸ் கட்சி இழக்க நேரிடும் என ராமசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். பெர்சத்து குறைந்த நாடாளுமன்றங்களைக் கொண்டிருக்கும் கட்சியாக இருந்தாலும் Tan Sri Muhyiddin Yassin, Datuk Seri Hamzah Zainudin, Datuk Seri Azmin Ali போன்றவர்கள் அரசியல் ஆளுமை மிக்க தலைவர்கள் என்றும் நிர்வாக அனுபவம் மிக்க தலைவர்கள் என்றும் பேராசிரியர் Ramasamy தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *