பெர்சாத்து நெருக்கடியை பாஸ் கவனித்து வருகிறது – தக்யூடின் ஹாசான்

top-news

கோத்தா பாரு, பிப். 9-

பெர்சாத்து கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பான முன்னேற்றங்களை பாஸ் கட்சி தொடர்ந்து கவனித்து வருவதாகவும், கட்சித் தலைமையால் எடுக்கப்படும் எந்த முடிவும் நீதிக் கொள்கை மற்றும் பொதுநலன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் பாஸ் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தக்யூடின் ஹாசான் தெரிவித்தார்.

பெர்சாத்துவில் மூண்டுள்ள பிரச்சினை அனைத்து தரப்புகளுக்கும் ஏற்ற வகையில் நல்ல முறையிலும் அமைதியான சூழலிலும் தீர்க்கப்பட வேண்டும் என பாஸ் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

“எந்தக் கட்சியிலுமானாலும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் பொதுநலனை கருத்தில் கொண்டு இருக்க வேண்டும். அனைத்து தரப்புகளின் நலனையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, நீதியை உறுதிப்படுத்தும் விதமாக செயல்பட வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.

பெர்சாத்து, பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் பாஸின் கூட்டணி கட்சி என்பதால், அதற்கு சிறந்த தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“கூட்டணியில் உள்ள எந்தக் கூறு கட்சியும் வலுவாக இல்லாவிட்டால், அந்தக் கூட்டணி முழுவதுமாக வலுவாக இருக்க முடியாது,” என அவர் கூறினார்.

இங்கு நேற்று இரவு நடைபெற்ற 2026 சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *