பாஸ் கட்சியால் GERAKAN & MIPP கட்சிகளுக்கு ஆபத்து!
- Thinagaren Sanggaren
- 11 Jan, 2026
ஜனவரி 11,
பெரிக்காத்தானின் தலைமையைப் பாஸ் கட்சி வழிநடத்தினால் அதன் உறுப்புக் கட்சிகளான கெராக்கானுக்கும் மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP-க்கும் ஆபத்து என்றாலும் அவர்கள் வேறு எங்கும் போக முடியாததால் பாஸ் கட்சியுடன் இருந்தாக வேண்டியது கட்டாயம் என பெரிக்காத்தானின் Tasek Gelugor நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Wan Saiful Wan Jan தெரிவித்தார். MIPP-யும் கெராக்கானும் மலாய்காரர் அல்லாதவர்களின் ஆதரவால் இயங்கும் கட்சி. பாஸ் அதற்கு நேர்மாறாக மலாய்க்காரர்களின் நலனை மட்டுமே முன்னிருத்தும் கட்சி. இவர்களுக்குள் அரசியல் முரண் இருந்தாலும் இவர்களை இணைக்கும் ஒரு பாலமாக முகைதீன் இருந்தார்.
முகைதீன் மலாய்க்காரர்களுக்கான தலைவராக மட்டுமே அறியப்பட்டவர் அல்ல, அவர் பிரதமராகவும் அமைச்சராகவும் இருந்த காலத்தில் இந்தியர்களின் நலத்திட்டங்களையும் சீனர்களுக்கான நலத்திட்டங்களையும் வழிநடத்தியுள்ளார். ஆனால் பாஸ் கட்சி அப்படி அல்ல. இதனால் கெராக்கானுக்கும் MIPP-க்கும் பெரிக்காத்தானில் ஆளுமையும் அதிகாரமும் குறையும். அவர்களின் சொந்த சமூகத்தினரே அவர்களுக்கு எதிராகத் திரும்புவார்கள். இதனால் கெராக்கானுக்கும் MIPP-க்கும் பாதிப்பு. ஆனால் கெராக்கானுக்கும் MIPP-க்கும் பெரிக்காத்தானிலிருந்து விலகி போக எந்தவொரு திசையும் இல்லை. அவர்கள் பெரிக்காத்தானுடன் இருந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும் என பெரிக்காத்தானின் Tasek Gelugor நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Wan Saiful Wan Jan தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



