பாஸ் கட்சி கோயில்களுக்கு எதிராக அவதூறு! அமைதியாக இருக்கும் MIPP, MAP, URIMAI கட்சி! RAYER சாடல்!
- Thinagaren Sanggaren
- 25 Jan, 2026
ஜனவரி 25,
பாஸ் கட்சி பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினரான AHMAD FADHLI SHAARI இந்து கோயில்களை HARAM என நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருப்பதை MAP எனும் மலேசிய முன்னேற்றக் கட்சி, MIPP எனும் மலேசிய இந்திய மக்கள் கட்சி, உரிமை கட்சி என இந்த 3 கட்சிகளும் வாயை மூடிக்கொண்டிருப்பதாக டி.ஏ.பியின் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் Rsn Rayer சாடினார். இந்த MIPP, MAP, URIMAI ஆகிய 3 கட்சிகளும் பெரிக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் கட்சிகளாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் பெரிக்காத்தானின் AHMAD FADHLI SHAARI நாடாளுமன்றத்திலேயே கோயில்களை HARAM என வைக்கபடுத்தியுள்ளார். இதற்கு இந்த 3 கட்சிகளின் நிலைப்பாடு என்ன எனும் கேள்வியை Rsn Rayer வினவினார்.
பாஸ் கட்சி KUIL HARAM எனும் வார்த்தையைப் பயன்படுத்துவதில் இந்த MIPP, MAP, URIMAI கட்சிகள் ஏற்றுக்கொள்கிறதா என ராயர் கேள்வி எழுப்பினார். அரசு நிலங்களையும் தனியாருக்குச் சொந்தமான நிலங்களையும் ஆக்கிரமித்திருக்கும் கோயில்களை KUIL HARAM என வகைப்படுத்தும் பாஸ் கட்சிக்கு இவர்கள் ஆதரவளிக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பாஸ் கட்சி தைரியமாக நம் இந்து கோயில்களை HARAM என வகைப்படுத்துகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



