மகாதீரைப் பழிக்க வேண்டாம்! பாஸ் கட்சி எச்சரிக்கை!

- Sangeetha K Loganathan
- 16 Dec, 2024
டிசம்பர் 16,
BATU PUTEH விவகாரத்தில் ஒற்றுமை அரசாங்கம் திட்டமிட்டு முன்னாள் பிரதமரைப் பழிவாங்குவதாகப் பாஸ் கட்சி தலைவர் Tan Sri Abdul Hadi Awang குற்றம் சாட்டினார். BATU PUTEH என்பது மணல் திட்டு. கல் பாறைகள் எனும் போது, மூத்த அரசியல் தலைவரை பாறைகளுக்காகப் பழிப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றும், மகாதீர் பிரதமராவதற்கு முன்னமே BATU PUTEH சிங்கப்பூருக்கு விற்கப்பட்டது என Hadi Awang தெரிவித்தார். யாருக்காகவோ மகாதீரைப் பழிப்பது அரசாங்கத்திற்கு அழகல்ல என்றும் கடந்த காலங்களில் மகாதீரால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்காக இப்போது அவரை அரசாங்கமே ஒன்று சேர்ந்து எதிர்ப்பது பொறுப்பற்ற செயல் என்றும் Hadi Awang தெரிவித்தார்.
2018 அமைச்சரவையின் முடிவை மகாதீர் எதிர்க்கவில்லை. அதற்காக அவர் தான் முடிவெடுத்தார் என குறிப்பிடுவது சரியில்லை என்றும் தனிப்பட்ட விரோதத்திற்காக அரசாங்கத்தைப் பயன்படுத்தி தனி மனிதரைப் பழிவாங்குவது ஆட்சுக்கு ஆபத்து என Hadi Awang ஒற்றுமை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Presiden PAS, Tan Sri Abdul Hadi Awang, menolak tuduhan terhadap Tun Dr Mahathir Mohamad mengenai isu Batu Puteh. Beliau menyatakan Batu Puteh diserahkan kepada Singapura pada 1953 sebelum Mahathir menjadi Perdana Menteri dan mengkritik tindakan menjadikan beliau sasaran politik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *