இந்து மத சடங்குகளிலிருந்து விலகியிருங்கள்! சிலாங்கூர் பாஸ் கட்சி வலியுறுத்து!

- Sangeetha K Loganathan
- 08 Apr, 2025
ஏப்ரல் 8,
இந்து மதம் சார்ந்த சடங்குகளிலிருந்து இஸ்லாமியர்கள் விலகியிருக்க வேண்டும் என சிலாங்கூர் மாநிலப் பாஸ் கட்சியின் சட்டப்பிரிவின் தலைவர் Yusfarizal Yusoff தெரிவித்தார். கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்கும் போது மதம் சார்ந்த குறியீடுகளை அனுமதிக்க வேண்டாம் என்பதைப் பெரும்பாலான இஸ்லாமியர்கள் மறந்துவிட்டதாகவும் Yusfarizal Yusoff குறிப்பிட்டுள்ளார்.
இது பிரதமர் அன்வாரிடமிருந்தூ தொடங்கிய ஒரு குழப்பம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு அன்வார் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் நெற்றியில் இந்து மதத்தின் அடையாளமாகப் பொட்டு வைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய Yusfarizal Yusoff, இது மாதிரியானக் குழப்பவாதிகளால் இஸ்லாத்தின் புனிதம் பாதிக்கப்படுவதாகவும் உண்மையான இஸ்லாத்தின் புனிதம் மீது தவறானப் புரிதலை ஏற்படுத்துவதாகவும் Yusfarizal Yusoff தெரிவித்தார்.
Yusfarizal Yusoff, Ketua Bahagian Undang-Undang PAS Selangor, menggesa umat Islam untuk menjauhkan diri dari ritual keagamaan Hindu dan menyatakan bahawa penglibatan dalam aktiviti kebudayaan yang mengandungi unsur-unsur keagamaan adalah bertentangan dengan ajaran Islam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *