பாஸ் கட்சியுடன் அம்னோ! Zahid Hamidi முடிவு!

top-news
FREE WEBSITE AD

ஜுன் 6,

பாஸ் கட்சியுடன் அம்னோ கூட்டணி அமைத்து ஜோகூர், நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் இல்லை என அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான DATUK SERI AHMAD ZAHID HAMIDI தெரிவித்தார். Johor, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் அம்னோ வலுவாகவே உள்ளது. கடந்த தேர்தலில் பாரிசான் தனித்து போட்டியிட்டது போல இப்போதும் தனித்து போட்டியிடும் என DATUK SERI AHMAD ZAHID HAMIDI உறுதியளித்தார். 

 தலைநகரில் உள்ள ஓர் உல்லாச விடுதியில் பாரிசான் தலைவர்களும் பாஸ் கட்சியின் தலைவர்களும் ரகசிய சந்திப்பு நடத்தியதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என்றும், பாரிசான் தலைவர்கள் அப்படியான சந்திப்புகளை மேற்கொள்ளவே இல்லை என்றும் DATUK SERI AHMAD ZAHID HAMIDI தெரிவித்தார். பாஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புகளே இல்லை எனும் போது, திரை மறைவில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும், JOHOR, NEGERI SEMBILAN மாநிலங்களில் பாரிசான் தனிப்பெரும்பான்மையை கொண்டிருக்கிறது என்றும் DATUK SERI AHMAD ZAHID HAMIDI தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *