ஆயுதம் ஏந்திய கொள்ளை வழக்கு: 11 இந்தோனேஷியா நபர்கள் கைது, 7 நாள் ரிமாண்ட்

top-news
FREE WEBSITE AD

நிபோங் தெபால், ஏப். 10-

பினாங்கு மாநிலத்தில் கட்டுமானத் தளங்களில் உள்ள தொழிலாளர் தங்குமிடங்களைக் குறிவைத்து இடம்பெற்ற ஆயுத கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக, காதல் ஜோடி உட்பட 11 இந்தோனேசிய நாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

27 முதல் 44 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களுக்கு ஏழு நாள் ரிமாண்ட் உத்தரவை மாஜிஸ்திரேட் நுருல் ஐன்னா அகமது இன்று வழங்கியுள்ளார். இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 395/397ன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் மூன்று இடங்களில் கைது செய்யப்பட்டனர். இதில், சுங்கை பாகாப் மற்றும் சிம்பாங் அம்பாட் பகுதிகளில் தலா மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஐவர் பேராக் மாநிலத்தின் ஈப்போவில் அதிகாலை 12.40 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, நேற்று அதிகாலை 1.30 மணியளவில், முகமூடி அணிந்த ஆறு நபர்கள் கத்தி மற்றும் பாராங் போன்ற ஆயுதங்களுடன் தொழிலாளர் தங்குமிடத்துக்குள் புகுந்து, அங்கு இருந்தவர்களை மிரட்டி, அவர்களின் கைகள் மற்றும் கால்களை கேபிள் கட்டுகளால் கட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், சந்தேக நபர்கள் 13 கைப்பேசிகள், மூன்று சங்கிலிகள், ஒரு ஜோடி தங்க காதணிகள் உள்ளிட்ட சுமார் RM35,000 மதிப்பிலான பொருட்களையும், RM7,190 ரொக்கப் பணத்தையும் பறித்து தப்பிச் சென்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *