கைக்குழந்தையுடன் தப்பிய தம்பதியர்! காவல் துறை தேடி வருகிறது!

top-news

ஜனவரி 21,

ஜொகூர் சாலையில் சோதனை நடவடிக்கை நிறுத்தாமல் சென்ற சொகுசு வாகனத்தைக் காவல்துறையினர் தேடிவருவதாக Batu Pahat மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார். சாலையின் நடுவே சொகுசு வாகனத்தைக் காவல் அதிகாரிகள் துப்பாக்கியைக் காட்டி நிறுத்தும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து Shahrulanuar இன்று விளக்கமளித்தார்.

சோதனை நடவடிக்கையின் போது சம்மந்தப்பட்ட வாகனம் நிறுத்தாமல் சென்றதால் காவல் துறையினர் வாகனத்தைத் துரத்தியதாகவும் நிறுத்தப்பட்ட வாகனத்திற்குள் கைக் குழந்தையுடன் பெண் ஒருவரும் இருந்ததாகவும் வாகனத்தை ஓட்டிய ஆடவர் காவல்துறையினருடன் ஒத்துழைக்காமல் வாகனத்தைப் படுவேகமாகச் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட வாகனமோட்டி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக Shahrulanuar தெரிவித்தார்.

Batu Pahat polis mencari pasangan yang melarikan diri bersama bayi dalam kenderaan mewah semasa pemeriksaan jalan raya. Video menunjukkan polis cuba memberhentikan kenderaan menggunakan senjata tular di media sosial.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *