தப்பிக்க முயற்சித்த 3 வெளிநாட்டினர் காயம்! 64 பேர் கைது!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 15,

கூச்சிங்கில் உள்ள கோளிக்கை மையத்தைச் சோதனையிட்ட தேசிய குடிநுழைவுத் துறை 64 வெளிநாட்டினர்களைக் கைது செய்துள்ளது. சோதனை நடவடிக்கையின் போது கேளிக்கை மையத்திலிருந்து தப்பிக்க முயற்சித்த 3 வெளிநாட்டுப் பெண்கள் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்ததால் காயமடைந்ததாகச் சரவாக் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. முன்னதாகக் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் பெண்களை விரட்டும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதைத் தொடர்ந்து சரவாக் மாநிலக் குடிநுழைவுத் துறை விளக்கம் அளித்துள்ளது. 

சோதனையின் போது தப்பிக்க முயற்சித்த வெளிநாட்டினர்களை அதிகாரிகள் விரட்டும் போது 3 வெளிநாட்டுப் பெண்கள் கல்வாயில் விழுந்ததில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாகவும் சிகிச்சைக்குப் பின்னர் கூச்சிங் குடிநுழைவு அலுவலகத்தில் அவர்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் சரவாக் மாநிலக் குடிநுழைவுத் துறை விளக்கம் அளித்துள்ளது. கைது செய்யப்பட்டிருக்கும் அனைவரும் China, Vietnam, Laos, Filipina, Indonesia ஆகிய நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 43 வயதினர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட கேளிக்கை மையத்தில் சட்டவிரோதச் சூதாட்ட மையங்களில் பணியாற்றிய 22 வெளிநாட்டினர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சரவாக் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *