போலி MyKad! தலைநகரில் 217 வெளிநாட்டினர்கள் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 18,

தலைநகரில் சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் போது 217 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு தேசிய குடிநுழைவுத் துறை, காவல்துறை, பதிவு இலாகா ஆகிய அதிகாரிகள் அம்பாங்கில் உள்ள GALAXY MALL, KOTA RAYA Komplex ஆகிய இரு வெவ்வேறு பகுதிகளில் சோதனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோத்தா ராயா வணிக வளாகத்தில் 652 வெளிநாட்டினர்களும் 224 உள்ளூர்வாசிகளையும் சோதனையிட்டதாகவும் AMPANG GALAXY வணிகவளாகத்தில் 394 வெளிநாட்டினர்களையும் 260 உள்ளூர்வாசிகளையும் என மொத்தம் 1530 தனிநபர்களிடம் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. 

சுற்றுலா விசாவுக்கானக் கால அவகாசம் நிறைவடைந்தும் மலேசியாவில் தங்கியிருந்தது. வணிகத்தில் ஈடுபட்டது, மலேசியாவுக்குள் நுழைந்ததற்கான ஆவணங்கள் கொண்டிருக்காதது, போலி அடையாள அட்டைகளைக் கொண்டிருத்தல் என பல்வேறு குற்றங்களுக்காக 21 முதல் 63 வயதுக்கு உட்பட்ட 217 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர்கள் Myanmar, Filipina, Indonesia, India, Nepal, Bangladesh, Pakistan, Nigeria, Jerman ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் மேலதிகாநடவடிக்கைகளுக்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *