அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்: ஈரான்–அமெரிக்கா பதற்றம் தீவிரம்
- Surendran Sumdraraj
- 07 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 7-
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல் விரைவில் முடிவடையும் அறிகுறிகள் இதுவரை இல்லை. மாறாக, இந்த மோதல் மேலும் நீடிக்கும் அபாயம் இருப்பதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அண்மையில் அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் ஈரான் கப்பலை குறிவைத்து டார்பிடோ தாக்குதல் நடத்திய சம்பவம் இடம்பெற்றது. இந்த தாக்குதல் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
சர்வதேச கடல் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் ஈரான் கடற்படையைச் சேர்ந்த குறைந்தது 87 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இரண்டு நாடுகளுக்கிடையேயான சாதாரண மோதல் அல்லாமல், உலகளாவிய பாதுகாப்பு நெருக்கடியை உருவாக்கக்கூடிய ஆபத்தான சூழ்நிலையாக மாறியுள்ளது.
இத்தகைய இராணுவ நடவடிக்கைகள் கட்டுப்படுத்த முடியாத போருக்கான அபாயத்தை அதிகரிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி வழங்குவோம் என்று ஈரான் ஏற்கனவே உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



