காவல்துறையின் மீது அவதூறு பரப்பாதீர்! சிலாங்கூர் காவல்துறை தலைவர் நினைவூட்டல்!
- Thinagaren Sanggaren
- 15 Dec, 2025
டிசம்பர் 15,
காவல்துறையினர் மேற்கொள்ளும் கைது நடவடிக்கைகள் குறித்து அவதூறுகளைப் பரப்பாதீர் என சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் Datuk Shazeli Kahar நினைவூட்டினார். காவல்துறையின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் சட்டத்திற்கு உட்பட்டிருக்கும் என்பதை Datuk Shazeli Kahar உறுதியளித்தார். மக்களைப் பாதுகாக்கவே காவல்துறை இயங்குகிறது. அப்படியான மக்களின் பாதுகாப்பிற்குப் பாதகம் விளைவிக்கும் குற்றவாளிகளுக்கு எதிராகக் காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சட்ட வரம்பை மீறி இருக்காது என Datuk Shazeli Kahar நம்பிக்கை அளித்தார்.
காவல்துறையின் ஒவ்வொரு கைது நடவடிக்கையும் முறையான சட்டவிதிகளுக்கு உட்பட்டு மட்டுமே இருக்கும் என்பதாகவும் ஒவ்வொரு சோதனை நடவடிக்கையும் கைது நடவடிக்கையும் முறையாகப் பதிவு செய்யப்பட்டும் முன் எச்சரிக்கையுடனுமே செயல்படுத்தப்படுகிறது என சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் Datuk Shazeli Kahar விளக்கமளித்தார். அதே வேளையில் காவல்துறைக்கு எதிராகச் சுமத்தப்படும் புகார்களுக்குத் தகுந்த ஆதாரங்கள் இருக்குமே என்றால் காவல்துறையின் ஒழுங்கு நடவடிக்கை குழு நிச்சயம் விசாரணையை மேற்கொண்டு காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் என சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் Datuk Shazeli Kahar தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



