ஆசிய விளையாட்டு: தென் கொரியாவிடம் 1-3 என தோல்வி – மலேசிய மகளிர் பேட்மிண்டன் அணி வெளியேற்றம்

top-news
FREE WEBSITE AD

ஐச்சி, செப். 22-

 ஐச்சி–நகோயா 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் அணிகள் பேட்மிண்டன் காலிறுதியில் மலேசியா 1-3 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதன் மூலம் மகளிர் அணிகள் பிரிவில் 64 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வெல்லும் மலேசியாவின் கனவும் நிறைவேறாமல் போனது.

இச்சினோமியா சிட்டி முனிசிபல் ஜிம்னாசியத்தில் நடைபெற்ற முதல் ஒற்றையர் ஆட்டத்தில் மலேசியாவின் கே. லெட்சனா, உலகின் முதல் நிலை வீராங்கனை ஆன் சே யங்கிடம் 12-21, 8-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய மலேசியாவின் முன்னணி இரட்டையர் ஜோடியான பேர்லி தான் – எம். தினா, உலக சாம்பியன்களான பேக் ஹா நா – லீ சோ ஹீ ஜோடியை 22-20, 21-17 என்ற கணக்கில் வீழ்த்தி, போட்டியை 1-1 என சமநிலைக்குக் கொண்டு வந்தனர்.

இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் வோங் லிங் சிங், கிம் கா யுனிடம் 12-21, 18-21 என்ற கணக்கில் தோற்றார்.

பின்னர் செங் சூ யின் – லோ சி யூ ஜோடி முதல் செட்டை கைப்பற்றியபோதிலும், தென் கொரியாவின் ஜியோங் நா யுன் – கிம் ஹை ஜியோங் ஜோடியிடம் 21-18, 11-21, 22-24 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தது. இதனால் தென் கொரியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *