லாரி மோதியதில் சாலை பாதுகாப்புப் பெண் அதிகாரி மரணம்!

top-news

பிப்ரவரி 26,


மாரத்தோன் ஓட்டப்பந்தயத்தின் போது சாலை போக்குவரத்து ஒழுங்கு முறை பணியில் இருந்த பெண் அதிகாரி மீது லாரி மோதியதில் 73 வயது பெண் அதிகாரி சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று மாலை Jalan கோம்பாக்கில் அவர் பணியிலிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்ததாகக் கோம்பாக் மாவட்டக் காவல் ஆணையர் Noor Ariffin Nasir தெரிவித்தார். 

32 வயது லாரி ஓட்டுநர் செலுத்திய லாரி கட்டுப்பாட்டை இழந்து பெண் அதிகாரியை மோதியதில் 73 வயது அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்திற்குக் காரணமான 32 வயது லாரி ஓட்டுநர் விசாரணைக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கோம்பாக் மாவட்டக் காவல் ஆணையர் Noor Ariffin Nasir தெரிவித்தார்.

Seorang pegawai wanita berusia 73 tahun maut selepas dilanggar lori ketika mengawal lalu lintas semasa larian maraton di Jalan Gombak. Pemandu lori berusia 32 tahun hilang kawalan menyebabkan kemalangan. Polis telah menahan pemandu untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *