சிறை கைதிக்குப் போதைப்பொருள் வழங்கிய பெண் வழக்கறிஞர் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 1,

சிறை கைதிக்கு போதைப்பொருள் வழங்கியதாக நம்பப்படும் வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் Terengganu மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Khairi Khairudin தெரிவித்தார். விசாரணைக்காகக் கோலா திரங்கானு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட விசாரணைக் கைதி, விசாரணைக்குப் பின்னர் மீண்டும் சிறைக்குக் கொண்டு வரும் போது அவரிடம் போதைப்பொருள் இருப்பதைக் கண்காணிப்பு அதிகாரிகள் கண்டதாகவும், கைதியைப் பரிசோதித்ததில் அவரிடமிருந்து RM16,000 மதிப்பிலானப் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்ததாகவும் Terengganu மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Khairi Khairudin தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் கைதியை அவருடைய பெண் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தனியாகச் சந்தித்தது தெரிய வந்த நிலையில் சம்மந்தப்பட்ட பெண் வழக்கறிஞரைக் காவல்துறை விசாரித்ததில் பெண் வழக்கறிஞர் கைதிக்குப் போதைப்பொருளை வழங்கியிருப்பதாகத் தெரிய வந்ததும் சம்மந்தப்பட்ட பெண் வழக்கறிஞரைக் காவல்துறை கைது செய்திருப்பதாக Terengganu மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Khairi Khairudin தெரிவித்தார். சம்மந்தப்பட்ட கைதியிடமிருந்து 123 கிராம் yaba மாத்திரைகள், 21 கிராம் கஞ்சா, 13 கிராம் Erimin என பல வகையிலானப் போதைப்பொருள்களைக் காவல்துறை பறிமுதல் செய்திருப்பதாகவும் இது குறைந்தபட்சம் 800 பேர் பயன்படுத்தும் அளவிற்கானது என்றும் Terengganu மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Khairi Khairudin தெரிவித்தார்.

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *