மீண்டுமொரு மளிகைக் கடை கொள்ளை

top-news
FREE WEBSITE AD

பாலிங், ஜூன் 4 –

கெடா மாநிலம் கோலா கெத்தில் அருகே உள்ள கம்போங் கோலா லெசுங் பகுதியில் அமைந்துள்ள மளிகைக் கடை ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில், கடை ஊழியர் ஒருவர் வாளால் தாக்கப்பட்டு காயமடைந்தார்.

கடந்த திங்கட்கிழமை இரவு சுமார் 8.45 மணியளவில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று வெள்ளை நிற Perodua Bezza காரில் சம்பவ இடத்துக்கு வந்ததாகப் போலீசார் தெரிவித்தனர். தலைக்கவசம், முகமூடி, கையுறை மற்றும் ஜாக்கெட் அணிந்திருந்த அந்த நபர்களில் ஒருவர் வாளுடன் கடைக்குள் நுழைந்துள்ளார்.

பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர், கண்காணிப்பாளர் பிராண்டன் ரிச்சர்ட் ஜோ வெளியிட்ட தகவலின்படி, பாதிக்கப்பட்டவர் 20 வயதுக்கு மேற்பட்ட உள்ளூர் இளைஞர் ஆவார். கொள்ளை முயற்சியின் போது வாளுடன் இருந்த சந்தேகநபர், கடை ஊழியரை நோக்கி வாளால் தாக்கியதில் அவரது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த இளைஞர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் கொள்ளையர்கள் பணம் மற்றும் சில பொருட்களை அபகரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *