போலி முதலீட்டில் RM 5 மில்லியன் இழந்த குத்தகையாளர்!

- Sangeetha K Loganathan
- 09 Jan, 2025
ஜனவரி 9,
முகநூல் மூலம் பெறப்பட்ட முதலீட்டு விளம்பரத்தில் RM5,900,506 பணத்தை முதலீடு செய்த 58 வயதானக் குத்தகையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.
பிரபல நிறுவனமான APPLE STORE நிறுவனத்தில் முதலீடு செய்வதாக நம்பி 8 வெவ்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் 30 பரிவர்த்தனைகள் மூலமாகச் செப்டம்பர் முதல் கடந்த நவம்பர் வரையில் RM5,900,506 முதலீடு செய்ததாகவும் கடந்த 2 மாதங்களாக முதலீடு செய்யப்பட்ட பணத்திற்கான லாபம் பெறாத நிலையில் சம்மந்தப்பட்ட வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட 58 வயது குத்தகையாளர் காஜாங் மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.
Seorang lelaki 58 tahun kerugian RM5.9 juta selepas terpedaya dengan iklan pelaburan palsu di Facebook. Mangsa membuat 30 transaksi ke lapan akaun bank asing dari September hingga November. Kes disiasat polis Kajang, kata Datuk Hussein Omar Khan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *