பேருந்து மோதியதில் இளம்பெண் பலி!
- Sangeetha K Loganathan
- 06 Feb, 2025
பிப்ரவரி 6,
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பயணிகள் பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 18 வயது இளம் உயிரிழந்தார். இரவு 8.20 மணிக்குக் கோலா திரங்கானுவிலிருந்து Kuala Berang செல்லும் சாலையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 18 வயது Nur Damia Umairah என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேருந்தின் முன் சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென பேருந்து செல்லும் சாலையில் திரும்பியதால் இவ்விபத்து ஏற்பட்டதாகக் கோலா திரங்கானு மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார். 70 வயது பேருந்து ஓட்டுநர் அளித்த வாக்குமூலமும் பேருந்தின் முன்பக்கப் பதிவுக் காணொலியின் அடிப்படையிலும் விசாரணையை மேற்கொள்ளவிருப்பதாகக் கோலா திரங்கானு மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார்
Seorang remaja perempuan, Nur Damia Umairah, 18 maut selepas motosikal yang dinaikinya bertembung dengan bas di Kuala Terengganu. Kemalangan berlaku apabila motosikalnya tiba-tiba membelok ke arah bas. Polis sedang menyiasat insiden berdasarkan rakaman dashcam dan keterangan pemandu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



