போலிஸ் சோதனையிலிருந்து தப்பிக்க முயற்சித்த 17 வயது மாணவர் விபத்தில் பலி!
- THINAGAREN SANGGAREN
- 16 Mar, 2026
மார்ச் 16,
காவல் அதிகாரி ஒருவர் மோட்டார் சைக்கிளோட்டியைத் துரத்திச் செல்லும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவிய நிலையில் தப்பிக்க முயற்சித்த மோட்டார் சைக்கிளோட்டி சாலையோரக் கால்வாய் கம்பியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் கம்பாரில் உள்ள Jalan Pasar Awam Kampar சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணிக்கு நிகழ்ந்ததாகக் கம்பார் மாவட்டக் காவல் ஆணையர் Nazri Daud தெரிவித்தார்.
வழக்கமானக் காவல்துறையின் சாலை போக்குவரத்து சோதனையின் போது 4 மோட்டார் சைக்கிள்கள் காவல் அதிகாரிகளைக் கண்டதும் மோட்டார் சைக்கிளைக் காவல் அதிகாரிகளுக்கு நேருக்கு நேராகச் செலுத்தி தப்பிக்க முயன்றதாகவும் காவல் அதிகாரிகளில் ஒருவர் தப்பிக்க முயற்சித்த மோட்டார் சைக்கிளோட்டியைத் துரத்தி சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் கம்பார் மாவட்டக் காவல் ஆணையர் Nazri Daud விளக்கமளித்தார். விபத்தில் உயிரிழந்தவர் 17 வயது மாணவர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகக் கம்பார் மாவட்டக் காவல் ஆணையர் Nazri Daud தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



