TOL சாவடியை மோதிய கார்! 18 வயது இளைஞர் பலி! இருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 06 Dec, 2024
டிசம்பர் 6,
இன்று காலை Sungai Dua சுங்கச் சாவடியின் தடுப்புச் சுவரை மோதிய காரில் பயணித்த 18 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதை அடுத்து அவருடன் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்தனர்.
தலைநகரிலிருந்து கெடாவுக்குப் பயணிக்கவிருந்த மூவரும் இன்று காலை 9.40 மணியளவில் Sungai Dua சுங்கச் சாவடியின் தடுப்புச் சுவரை மோதியதாகவும் விபத்தில் 18 வயது Adam Mifdal Affendy சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவருடன் பயணித்த 22 வயது Shahmi Yusof, 18 வயது Amirul Johan Rizwal இருவரும் படுகாயம் அடைந்ததாகவும் Kepala Batas மீட்பு ஆணையத்தின் அதிகாரி Idrus Zakaria தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் பின் இருக்கையில் சிக்கியதால் உயிரிழந்ததாகவும் முன்னிருந்த இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang pelajar kolej swasta maut dan dua rakan cedera selepas kereta mereka melanggar pembahagi jalan di Plaza Tol Sungai Dua, PLUS. Mangsa tersepit, manakala rakan dikejarkan ke hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *