அக்மால் சாலேவின் பதவி விலகல், அரசியல் அழுத்தமல்ல- துணைப் பிரதமர் சாஹிட் அமிடி

top-news

கோலாலம்பூர், ஜன. 15-

மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து டத்தோ டாக்டர் அக்மல் சாலே  விலகியது, அம்னோ கட்சி ஒற்றுமை அரசாங்கத்துடனான கூட்டணியை நிறுத்த வேண்டும் என்ற அரசியல் அழுத்தத்தின் விளைவல்ல என டத்தோ ஶ்ரீ சாஹிட் அமிடி தெளிவுபடுத்தினார்.

துணைப் பிரதமரும் பாரிசான் நேசனல் தலைவருமான அக்மட் சாஹிட், இந்த முடிவு முழுமையாக டாக்டர் முகமது அக்மல் அவர்களின் தனிப்பட்ட தீர்மானம் எனக் கூறினார். மேலும், அம்னோ தலைவர் என்ற வகையிலும், மலாக்கா மாநில அரசியல் சூழலை மதிக்கும் தலைவராகவும், அந்தத் தீர்மானத்தை தாம் மரியாதையுடன் ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

மலாக்கா மாநில மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் முகமது அக்மல் மீது, பதவி விலக வேண்டும் என எந்தவித அழுத்தமும் செலுத்தப்படவில்லை என்றும் அக்மட் சாஹிட் வலியுறுத்தினார். கட்சிக்குள் அல்லது அரசியல் கூட்டணியினுள் இருந்து இதற்கான கட்டாயம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இந்த பதவி விலகல், கட்சியின் உள் ஒழுங்கமைப்பையும் இளைஞர் அணியின் செயல்பாடுகளையும் வலுப்படுத்தும் நோக்கில் ஒரு புதிய கட்டத்தை உருவாக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *