பதவி விலகிய UKM பல்கலைக்கழகத் துணை வேந்தர்!

- Sangeetha K Loganathan
- 04 Feb, 2025
பிப்ரவரி 4,
மலேசியத் தேசியப் பல்கலைக்கழகமான UKM பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் Prof Datuk Mohd Ekhwan Toriman தனது பதவி காலம் முடியும் முன்னரே பதவி விலகுவதாக அறிவித்ததை உயர்கல்வி அமைச்சர் Datuk Seri Zambry Abdul Kadir உறுதிப்படுத்தினார். பதவி காலம் முடியும் முன்னரே பதவி விலகுவதாக அறிவித்த Prof Datuk Mohd Ekhwan Toriman குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் அவர் தாமாக முன்வந்து பதவி விலகியதாக உயர்கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
நேற்று Prof Datuk Mohd Ekhwan Toriman அவர்களிடமிருந்து பதவி விலகல் கடிதத்தைப் பெற்றதாகவும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டுள்ள நிலையில் இதில் எந்தவோர் உள்நோக்கமும் இல்லை என உயர்கல்வி அமைச்சர் Datuk Seri Zambry Abdul Kadir தெரிவித்தார்.
Prof Datuk Mohd Ekhwan Toriman, Timbalan Naib Canselor UKM mengumumkan peletakan jawatannya lebih awal dari tempoh yang ditetapkan. Menteri Pengajian Tinggi Datuk Seri Zambry Abdul Kadir mengesahkan peletakan jawatan tersebut adalah disebabkan alasan peribadi dan tiada sebarang unsur negatif
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *