மைக்கேல் கேரிக் நிரந்தர பயிற்சியாளராக வேண்டும் – மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் ஆதரவு

top-news
FREE WEBSITE AD

மான்செஸ்டர், ஏப். 8-

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக உள்ள மைக்கேல் கேரிக்கிற்கு, அணியின் வீரர்கள் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றதிலிருந்து அவர் காட்டிய சிறந்த செயல்திறன் காரணமாக, அவரை நிரந்தர பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

44 வயதான முன்னாள் மத்திய திடல் வீரரான கேரிக், அணியை இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் 10 போட்டிகளில் ஏழு வெற்றி, இரண்டு சமநிலை மற்றும் ஒரு தோல்வி மட்டுமே என்ற சாதனையுடன் முன்னேற்றியுள்ளார். இதன் மூலம், யுனைடெட் தற்போது மூன்றாவது இடத்தில் இருந்து அடுத்த சீசனில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கான தகுதிப்போட்டியில் இடம்பிடிக்கும் நிலையை அடைந்துள்ளது.

அணியின் விங்கர் அமாட் டியாலோ, கேரிக் தான் அணியை வழிநடத்த சரியான நபர் எனக் குறிப்பிட்டார். எனினும், இறுதி முடிவு கிளப் நிர்வாகத்தின் கைகளிலேயே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஒரு பயிற்சியாளரின் எதிர்காலத்தை தீர்மானிப்பது வீரர்களின் பொறுப்பு அல்ல. ஆனால், அவர் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். அணிக்கு பெரும் உதவியாக உள்ளார். அனுபவமும், இந்தக் கிளப்பின் தன்மையையும் நன்கு புரிந்தவர்,” என்று அமாட் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *