ஓர்லியன்ஸ் மாஸ்டர்ஸ்: மலேசிய வீரர்கள் இரண்டாம் சுற்றிலேயே வெளியேற்றம்
- Surendran Sumdraraj
- 20 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 20-
பிரான்சில் நடைபெற்ற ஓர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் மலேசிய அணியின் முன்னேற்றம் இரண்டாம் சுற்றிலேயே முடிவுக்கு வந்தது. நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய நான்கு வீரர்களும் காலிறுதிக்கு முன்னேற முடியாமல் நேற்று தோல்வியடைந்தனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் களமிறங்கிய காங் கை சிங் – ஆரோன் தாய் ஜோடி, டென்மார்க் நாட்டின் கிறிஸ்டியன் பாஸ்ட் க்யார் – ராஸ்மஸ் க்யார் ஜோடிக்கு எதிராக அதிர்ச்சியளிக்கும் தோல்வியைச் சந்தித்தது. உலக தரவரிசையில் 87ஆவது இடத்தில் உள்ள டென்மார்க் ஜோடி, 17-21, 13-21 என்ற கணக்கில் 32 நிமிடங்களில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வியுடன், இரு அணிகளுக்கிடையேயான நேருக்கு நேர் சாதனை 1-1 என சமநிலைக்கு வந்துள்ளது. உலக தரவரிசையில் 26ஆவது இடத்தில் உள்ள மலேசிய ஜோடி எதிர்பார்த்த அளவிற்கு விளையாட முடியவில்லை.
இதற்கிடையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் மலேசியாவின் வோங் லிங் சிங், இந்திய வீராங்கனை மல்விகா பன்சோத் எதிராக நேரடி செட்களில் தோல்வியடைந்தார். உலக தரவரிசையில் 56ஆவது இடத்தில் உள்ள மல்விகா, 22-24, 13-21 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



