வடக்கு–தெற்கு நெடுஞ்சாலையில் விபத்து – லாரி ஓட்டுநர் உயிரிழப்பு
- Surendran Sumdraraj
- 04 Mar, 2026
ஈப்போ, மார்ச் 4-
வடக்கு–தெற்கு நெடுஞ்சாலை (PLUS) வடக்கு நோக்கி தஞ்சோங் மாலிம் அருகே கிலோமீட்டர் 378-ல் நேற்று மாலை நடந்த சாலை விபத்தில் 24 வயதுடைய லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்தனர்.
பேராக் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் (JBPM) செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் சபரோட்சி நூர் அகமட், சம்பவம் குறித்து மாலை 3.57 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகத் தெரிவித்தார். அதன் பின்னர் தீயணைப்பு படையினர் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
இந்த விபத்தில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்டிருந்தன. அரிசி ஏற்றிச் சென்ற லாரி, இரும்புகள ஏற்றிய ட்ரெய்லர் மற்றும் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றிய மற்றொரு லாரி ஆகியவை மோதிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அரிசி ஏற்றிய லாரியை ஓட்டிய 24 வயது இளைஞர் வாகனத்தின் ஓட்டுநர் பகுதியில் சிக்கிக்கொண்ட நிலையில் இருந்தார். அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், சம்பவ இடத்திலேயே சுகாதார அதிகாரிகள் அவரை உயிரிழந்ததாக உறுதி செய்தனர்.
மேலும் மூவர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முழுமையாக மாலை 5.58 மணிக்கு நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



